×

தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது . ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் சுட்டெரிக்கிறது.அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசுகிறது.

இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்த வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நாட்களில் வெப்ப அலை வீசுவதற்கான ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் மே 2-ந்தேதி வரை வெப்ப அலை வீசும். மேலும் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது . ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : wave ,Erode ,Goa ,Tamil Nadu ,Indian Meteorological Centre ,Delhi ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Krishnagiri ,Tiruvannamalai ,Dharumpuri ,Kallakurichi ,Salem ,Namakkal ,Erodu ,Kowai ,Tiruppur ,Karur ,Trichy ,Perambalur ,Ariyalur ,Indian Weather Centre ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் இந்தியா...